Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை

குறள் 83
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று
[அறத்துப்பால், இல்லறவியல், விருந்தோம்பல்]

பொருள்
வரு - கிறேன், [com. வாறேன்], வந்தேன், வேன், வர, v. a. [neg. வரேன், வாரேன், imper. வா.] To come, நடக்க. 2. To happen, occur, சம்பவிக்க. 3. To accrue, be at command--as strength to move a limb, இயல. 4. To proceed spontaneously, இயல்பாய்வர. 5. (fig.) To come to mind, தோன்ற. நீவந்தகாரியமென்ன. What is the object of your coming? நாளைக்கங்கேவருவேன். I will come there to-morrow. உனக்குப்பாடம்வருமா. Do you know your lesson. நீஎப்போவந்தாய். When did you arrive? எனக்குஅடிக்கக்கைவராது. My hand is not at command to strike him. அவன்வந்தகாலோடேபோனான். He reterned no sooner than he came. உனக்குஎன்னவந்தாலும்நான்இருக்கிறேன். I will be [near], whatever may happen. இப்பொழுதுஅவனுக்குப்பெருமைவந்துவிட்டது. He is now very proud. வந்ததைவரப்பற்று. Receive whatever comes. அவனுக்குவியாதிவந்துகொண்டேயிருக்கிறது. He is always subject to sickness. ஒருமனம்வந்தாற்கொடுப்பான். He will give you if he have a mind. உனக்குச்சம்பளம்வந்ததா. Did you get your wages? வாய்வந்தவாறெல்லாம்எழுத்தலுற்றார். They of fered praises with every kind of com mendation which could proceed from their mouths, (பிரபுலி.) எனக்குநினைவுவந்தது. I just remembered. அப்போதுவாய்வரவில்லை. I could not speak then. அவனுக்கிரண்டுகாலும்வராது. He lame in both feet.

விருந்து - viruntu   n. [T. vindu, M.virunnu.] 1. Feast, banquet; அதிதி முதலியோர்க்கு உணவளித் துபசரிக்கை. யாதுசெய் வேன்கொல் விருந்து (குறள், 1211). 2. Guest; அதிதி.விருந்துகண் டொளிக்கும் திருந்தா வாழ்க்கை (புறநா.266). 3. Newcomer; புதியவன். விருந்தா யடைகுறுவார் விண் (பு. வெ. 3, 12). 4. Newness, freshness; புதுமை. விருந்து புனலயர (பரிபா. 6, 40).5. (Pros.) Poetic composition in a new style;நூலுக்குரிய எண்வகை வனப்புக்களு ளொன்று.(தொல். பொ. 551.)

வைகல் - vaikal   n. வைகு-. 1. Dwelling;staying; தங்குகை. (பிங்.) 2. Passing; கழிகை.மத்துக்கயி றாடா வைகற்பொழுது நினையூஉ (பதிற்றுப்.71, 16). 3. See வைகறை, 1. (சூடா.) 4. Day;நாள். இன்னா வைகல் வாரா முன்னே செய்ந்நீமுன்னிய வினையே (புறநா. 363). 5. cf. vaikāla.Day that has passed away; கழிந்த நாள். (பிங்.)6. cf. vikala. Instant, moment; வேளை. மாதவிதன்னோ டணைவுறு வைகலி னயர்ந்தனன் (சிலப். 3,173).

வைகலும் - vaikalum   adv. id. Daily,everyday; நாடோறும். அடிசில் பிறர்நுகர்க வைகலும் (பு. வெ. 10, 8).

ஓம்புதல் - காப்பாற்றுதல், பாதுகாத்தல், பேணுதல், வளர்த்தல்; தீங்குவாராமற்காத்தல்; போற்றுதல்; உபசரித்தல்; சீர்தூக்குதல்; பரிகரித்தல்; தவிர்த்தல்; விலக்கல்; நீக்குதல்; உண்டாக்குதல்.

ஓம்புவான் - உபசரிப்பான், பேணுவான்

வாழ்க்கை - வாழ்தல்; வாழ்நாள்; இல்வாழ்க்கை; மனைவி; நல்வாழ்வுநிலை; செல்வநிலை; ஊர்; மருதநிலத்தூர்.

பரு - இயல்பாக இல்லாமல், சற்று பருத்து இருக்கும் நிலை
பரு - paru   n. paru. cf. பரு-. 1. Pimple,as on the face; pustule; blotch; முகமுதலியவற்றிலுண்டாஞ் சிறு கட்டிவகை. Colloq. 2. Boil;சிலந்திப்புண். Loc. 3. Node; கணு (யாழ். அக.)4. Sea; கடல் (யாழ். அக.) 5. Mountain; மலை (யாழ். அக.) 6. Heaven; சுவர்க்கம் (யாழ். அக.)7. Sprout of paddy plant; நெல்லின் முளை Tj.
பரு - paru   adj. great gross, see under பருமை.
பருமை - parumai   n. cf. bṛh. [K. perme.]1. Thickness; bulkiness; corpulence; பருத்திருக்கை. 2. Greatness; பெருமை 3. Roughness,coarseness, grossness; பரும்படியான தன்மை 4.Seriousness, importance, gravity; முக்கியம் இதுபருங்காரியமாயிருக்கிறது. (W.)

பருவந்து - துன்பங்கள், வறுமை வந்து

பாழ்படுதல் - pāḻ n. பாழ்-. [K. hāḷ.] 1.Desolation, devastation, ruin; நாசம். நரகக்குழிபலவாயின பாழ்பட்டது (சடகோபரந். 5). 2.Damage, waste, loss; நட்டம். வெள்ளப்பாழ்,வறட்பாழ், குடிப்பாழ். 3. Corruption, decay,putrifaction; கெடுதி. ( W .) 4. Baseness, wretchedness, evil; இழிவு. ( W .) 5. That which isugly or graceless; அந்தக்கேடு. நீறில்லா நெற்றிபாழ் (நல்வழி, 24). 6. Profitlessness ..

இன்று - iṉṟu   n. and adv. இ³. [K. indu,M. innu.] This day, to-day; இந்நாள். (நாலடி,36.)
இன்று - iṉṟu   part. An expletive; ஓர்அசைச் சொல் (திவா.)
இன்று - iṉṟu   id. part. No; இல்லை.--adv.See இன்றி. உப்பின்று புற்கை யுண்கமா கொற்கையோனே (நன். 172, மயிலை.).

முழுப்பொருள்
தன்னிடம் வருபவர்களை இன்முகத்தோடு வரவேற்று அவர்களை உபசரித்து, உணவளித்து பசியாற்றி அவர்களை பேணுவது மிகச்சிறந்த அறமாகும். ஆனால் இதனையே (/பிறருக்கு விருந்தளிப்பதை) ஒவ்வொரு நாளும் இன்முகத்தோடு கடைப்பிடிக்கிறவனுடைய வாழ்க்கையானது வறுமை வந்து அதனால் வரும் துன்பத்தினால் (வாழ்க்கை) பாழ் (/நாசம்) ஆகாது. வறுமையும் துன்பமும் தற்காலிகமாக இருக்கலாம். ஆனால் அது நிரந்தரமாக அவர்களிடம் தங்காது.

வாழ்க்கை என்ற சொல்லுக்கு செல்வநிலை என்ற பொருளும் உண்டு. ஆதலால் ஒவ்வொரு நாளும் வருகிறவர்களுக்கு எல்லாம் விருந்துதளித்து உபசரிப்பதனால் வறுமை வந்து அவன் செல்வத்தை நாசம் செய்யாது என்று கொள்ளாலாம். இதனையே நாம் "தருமம் தலைக்காக்கும்" என்றும் சொல்லலாம்.

“உப்பிட்டவரை உள்ளளவும் நினை” என்கிற அறக்கட்டளை ஒரு சிலர் மனதிலாவது பதிந்திருக்குமானால், துன்பம் என்று வருங்காலையில், உதவி என்பது தானாகவே ஓடோடி வந்துவிடும் என்பது குறிப்பால் உணர்த்தப்படுகிறது.

கி.வா.ஜா வின் ஆராய்ச்சி உரையில் ‘பருவந்து’ என்னும் சொல், ‘பருவா’ என்றப் பகுதிச்சொல்லினின்று பிறந்தது என்று காண்கிறது. பொருள் கூறும் ஆசிரியர்கள், நல்குரவு என்ற சொல்லை பயன்படுத்தியிருந்தாலும், இரண்டு சொல்லுமே வழக்கில் இல்லாமல் போனது எனலாம். அகராதிகளில் நல்குரவு என்னும் சொல்லிருக்கிறது. பருவா என்ற சொல்லில்லை.

பரிதியாரின் உரை சற்று வேறுபட்டு “பரு” என்பதை உடலின் கண்தோன்றும் ஒருவித உடற்கட்டி என்று சொல்லி, அது தோன்றி பாழ்படுவதைப் போல வினையானது அறும் என்று பொருள் செய்திருக்கிறார். அவரது கற்பனை வளமா அல்லது சொல்லறிவு தேக்கமா என்று தெரியவில்லை என்றாலும், இப்படியும் சிந்திக்கமுடியும் என்பதைக் காட்டுகிறது.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
“.............வருவிருந் தயரும்
தண்குடி வாழ்நர் அங்குடிச் சீறூர்” (நற் 135:3-4)

பரிமேலழகர் உரை
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை - தன்னை நோக்கி வந்த விருந்தை நாள்தோறும் புறந்தருவானது இல்வாழ்க்கை; பருவந்து பாழ்படுதல் இன்று - நல்குரவான் வருந்திக்கெடுதல் இல்லை. (நாள்தோறும் விருந்தோம்புவானுக்கு அதனான் பொருள் தொலையாது; மேன்மேல் கிளைக்கும் என்பதாம்.).

மணக்குடவர் உரை
நாடோறும் வந்தவிருந்தினரைப் போற்றுவானது ஆக்கம், வருத்தமுற்றுக் கேடுபடுவதில்லை.

மு.வரதராசனார் உரை
தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள் தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை, துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை.

சாலமன் பாப்பையா உரை
நாளும் வரும் விருந்தினரைப் பேணுபவனின் வாழ்க்கை வறுமைப்பட்டுக் கெட்டுப் போவது இல்லை.

No comments:

Post a Comment